வீடுகளுக்கான இணைப்பு விபரங்கள்

புதிய நீர் விநியோக இணைப்பைப் பெற்றுக்கொள்வது எப்படி?

  • குறித்த பிரதேசம் குழாய் நீர் விநியோகமுள்ள பிரதேசமா என்பதை விசாரிக்கவும்.
  • உங்களுக்கு அண்மையில் உள்ள தே.நீ.வ.வ.சபை அலுவலகம் எங்கே இருக்கின்றது என்பதை தேடிப்பார்த்து புதிய நீர் விநியோக இணைப்புக்கான விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்க. (இன்றேல் பின்வரும் பகுதியிலிருந்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்க)
  • விண்ணப்ப படிவத்தை நிரப்பி உறுதிப்படுத்தும் ஆவணங்களின் பிரதிகளுடன் தே.நீ.வ.வ.சபை அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.
  • குறித்த அளவீடுகளை வழங்குவதற்கும் செலவு மதிப்பீடுகளைத் தயாரிப்பதற்கும் உதவிப் பொறியிலாளர் ஒருவர் அல்லது அலுவலகத்துக்குப் பொறுப்பான அதிகாரி உங்கள் வளாகத்தைப் பரீட்சிக்க விஜயம் செய்வார். கிடைத்துள்ள விண்ணப்ப படிவங்களின் எண்ணிக்கையின் பிரகாரம் இதற்கு ஆகக்கூடியதாக 7 நாட்கள் எடுக்கும். (அலுவலகத்தின் GIS முறைமையில் குழாய் மார்க்கம் தொடர்பான விபரங்கள் இருந்தால், விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரருக்கு செலவு மதிப்பீடு வழங்கப்படும்)
  • புதிய இணைப்பை வழங்குவதற்காக மார்க்கத்தில் நடைபாதை ஓரத்தை உடைக்க வேண்டிவந்தால், வீதி புனரமைப்பு கட்டணத்தை குறித்த உள்ளூராட்சி மன்றத்திற்கு/ வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் செலுத்த வேண்டியிருக்கும். செலுத்த வேண்டிய நிறுவனம் மற்றும் செலுத்த வேண்டிய தொகை செலவு மதிப்பீட்டுடன் விண்ணப்பதாரருக்கு ஒப்படைக்கப்படும்.
  • இச் சந்தர்ப்பத்தில், விண்ணப்பதாரருக்கு கட்டணம் செலுத்த முடியும். உள்ளூராட்சி மன்றத்திற்கு/ வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் செலுத்த வேண்டிய தொகையை விண்ணப்பதாரர் நேரடியாக அந் நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டும். குறித்த கொடுப்பனவு தொடர்பான சாட்சியங்களை விண்ணப்பதாரர் தே.நீ.வ.வ.சபை அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். (தேவையான சந்தர்ப்பங்களில்)
  • விண்ணப்பதாரர் தே.நீ.வ.வ.சபையுடன் ஒப்பந்தம் செய்துகொள்வார். (இவ் ஒப்பந்த மாதிரிப் படிவத்தை பின்வரும் பகுதியில் பார்த்துக்கொள்ள முடியும்)
  • கொடுப்பனவைச் செலுத்தி ஆகக்கூடியது 4 நாட்களின் பின்னர் நீர் விநியோக இணைப்பு வழங்கப்படும்.
கொழும்பு மற்றும் ஏனைய நகரசபை பிரதேசங்களில் நீர் இசைவுச் சான்றிதழ்/ செலவு மதிப்பீட்டை வழங்குதல் என்பவற்றுக்கான பணிகளுக்கு கட்டணம் விதித்தல் விபரங்களைப் பார்க்கவும்
Get Free Adobe PDF Reader Now