1939 Hotline
  1. Home
  2. /
  3. பிரதான பிரிவுகள்
  4. /
  5. ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு, நீர் வழங்கல் நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதற்காக நிறுவப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகள் பல பெரிய நிறுவனங்களில் பொதுவானவை. குறிப்பாக புதிய தயாரிப்புகள் அல்லது தொழில்நுட்பங்களுடன் பணிபுரியும் நிறுவனங்களில் காணப்படும். தற்போதைய அரசாங்கம் 100% பாதுகாப்பான குடிநீரை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் 60% ஆக காணப்பட்ட பாதுகாப்பான குடிநீர் விநியோகம் த ற்போது 80% ஆக அதிகரித்துள்ளது. இதில் குழாய்மூலமான நீர் விநியோகம் 45% ஆகும்.

மனித செயற்பாடுகளின் காரணமாக நீரின்தரம் நாளுக்கு நாள் குன்றி வருகின்றது. அத்துடன் காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுத்து நீர் வழங்கல் என்பது சவாலான பணியாக மாறி வருகின்றது.

எனவே, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் பணியானது பொருத்தமான தொழில்நுட்பங்களை தேர்ந்தெடுத்து செலவை மேம்படுத்துவதாகும். நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள் காணப்படும் வட மத்திய மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள எதிர்மறை சவ்வூடுபரவல் நிலையங்களை (RO Plants) கண்காணிப்பதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தொடர்பு விபரங்கள்

Research & Development Section
National Water Supply & Drainage Board
Head Office, Galle Road, Ratmalana