1939 Hotline
  1. Home
  2. /
  3. பிரதான பிரிவுகள்
  4. /
  5. பாவனையாளர் மற்றும் சொத்து முகாமைத்துவம்

பின்னணி :

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிறுவன மறுசீரமைப்பின் கீழ் 2021.03.09 ஆம் திகதி முதல் தலைமை அலுவலகத்தில் பாவனையாளர் மற்றும் சொத்து முகாமைத்துவ பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவு மேலதிகப் பொது முகாமையாளர் (பாவனையாளர் மற்றும் சொத்து முகாமைத்துவம்) அவர்களின் தலைமையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், 5 பிரதான பிரிவுகள் இப்பிரிவின் ஊடாக கண்காணிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றது. அதாவது, GIS  வரைபடமாக்கல் பிரிவு, சொத்து முகாமைத்துவப் பிரிவு, வருவாயற்ற (NRW)  நீர் பிரிவு, 1939 பாவனையாளர் அழைப்பு மையம் மற்றும் காணிப் பிரிவு ஆகிய பிரிவுகளாகும்.

நோக்கம் :

பாவனையாளர் அழைப்பு மையம் (1939):

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் 1939 பாவனையாளர் அழைப்பு மையம் 24/7 மணித்தியாலங்களும் சேவையிலிருக்கும் மையப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் தொடர்பு மையமாகும், இங்கு செயற்பாட்டிலுள்ள IVR, Chatbot மற்றும் நேரடி முகவர் ஒருவரின் மூலம் சிங்களம். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். இப்பிரிவின் ஊடாக பாவனையாளர் தொடர்பினை உறுதிப்படுத்துவதன் மூலம் சிறப்பான சேவையை நடாத்தி செல்கின்றது.

சொத்து முகாமைத்துவப் பிரிவு:

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் சொத்துக்களை பலனளிக்கும் வகையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் நீண்டகால சேவையை உறுதிப்படுத்திக் கொண்டு வணிக இலக்குகளை செயற்திறன் மிக்கதாகவும் நிலையானதாகவும் அடைந்து கொள்வதையே இப்பிரிவு தனது பிரதானமான நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கு பிரதானமாக உட்கட்டமைப்பு வசதிகளாக கட்டிடங்கள், நீர்க்குழாய் தொகுதிகள், மின்னியல் மற்றும் இலத்திரனியல் சார்ந்த சொத்துக்கள், நீர் மற்றும் கழிவுநீர் குழாய் சேவைகள் ஆகியவை அடங்கும்

வருவாயற்ற நீர் பிரிவு:

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நாடு பூராகவும் உள்ள வருவாயற்ற நீரின் அளவை குறைப்பதே வருவாயற்ற நீர் பிரிவின் பிரதானமான பணியாகும்.

GIS வரைபடமாக்கல் :

GIS வரைபடமாக்கல் பிரிவின் ஊடாக நாடு பூராகவும் குழாய் தொகுதியை மற்றும் துணைக்கருவிகள் GNSS வலையமைப்பின் மூலம் மொபைல் பயன்பாடுகள் மற்றும் துறைசார் தரவுகளைப் பயன்படுத்தி துல்லியமான, தரப்படுத்தப்பட்ட வரைபடங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

காணிப் பிரிவு:

இப்பிரிவின் மூலம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான காணி சுவீகரிப்பு மற்றும் குத்தகை சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் காணிகளை முகாமைத்துவம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

முக்கிய செயல்பாடுகள்

பாவனையாளர் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு

  • 1939 பாவனையாளர் அழைப்பு மையத்தின் நடவடிக்கைகளை செயற்படுத்துதல்
  • பாவனையாளர் தொடர்பாடல் தொகுதியை முகாமைத்துவம் செய்தல்
  • பாவனையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

உட்கட்டமைப்பு வசதிகள் சம்பந்தமான சொத்து முகாமைத்துவம்

  • சொத்து பதிவேட்டின் தழுவல்
  • சொத்து மூலோபாய திட்டமிடல்
  • சொத்து சம்பந்தமான ஆபத்தான நிலைமைகளை முகாமைத்துவம் செய்தல்
  • சொத்து சம்பந்தமான கொள்கைகளை தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல்
  • சொத்து பாதுகாப்பு திட்டம் மற்றும் மேம்படுத்துதல்

வருவாயற்ற நீரின் முகாமைத்துவம்

  • நாடு பூராகவும் உள்ள வருவாயற்ற நீரை கண்காணித்தல் மற்றும் அறிக்கை செய்தல்
  • வருவாயற்ற நீரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்துதல்
  • வருவாயற்ற நீர் மூலோபாய திட்டமிடல்

GIS வரைபடமாக்கல்

  • நீர் உட்கட்டமைப்பு சொத்துக்களை GPS வரைபடமாக்கல்
  • GPS தொழில்நுட்பத்தின் மூலம் நீர் மற்றும் கழிவுநீரமைப்பு சொத்துக்களை வரைபடமாக்கல்.
  • நீர் கசிவுகளை வரைபடமாக்கல்.
  • உள்ளமைக்கப்பட்ட வரைபடங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் அடிப்படை வரைபடங்களைத் தயாரித்தல்.
  • GPS தரவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் விநியோகித்தல்

காணி முகாமைத்துவம்

  • காணி சுவீகரித்தல் நடவடிக்கைகள்
  • காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குதல்
  • காணி சம்பந்தமான தரவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் உரிய பங்குதாரர்களுடனான ஒருங்கிணைப்பினை உறுதி செய்தல்

தொடர்பு விபரங்கள்

Consumer & Asset Management Section
National Water Supply & Drainage Board
Head Office, Galle Road, Ratmalana


Tel: 011-2625778
Fax: 011-2632249
Additional General Manager (CAM)
Ms. Senani Jayasinghe


Tel: 011-2625778
Fax: 011-2632249
Email: addlgmcam@gmail.com
Deputy General Manager (CAM)
Mr. R. W. M. R. P. Wanigasekara

 
Tel: 011-2632243
Fax: 011-2632249
Email: wbdgmcam@gmail.com
Assistant General Manager (CAM)
Mr. D. A. D. Hemachandra


Tel: 011-2625778
Fax: 011-2632249
Email: agmcam9@gmail.com
Assistant General Manager
(GIS Mapping /NRW-OW)
Mr. B. U. J. Perera


Tel: 011-2625778
Fax: 011-2632249
Email: upuljanaka@gmail.com
Assistant General Manager (NRW)
Mr. T. Suthakaran


Tel: 011-2082460
Fax: 011-2632249
Email: suthakaranadb7@gmail.com