
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், குடிநீர் வசதிகளை வழங்குவதற்கு அப்போதைய அரசாங்கத்தினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், விசேடமாக கிராமிய நீர் வழங்கல் நடவடிக்கைகளை உள்ளுராட்சி நிறுவனங்களின் ஊடாக பிராந்திய மட்டத்தில் செயற்படித்தப்பட்டது. பொதுவான ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் சிறிய அளவிலான குழாய் நீர் வசதிகள் குறித்த காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், 1980 ஆம் ஆண்டு “உலகளாவிய நீர் தசாப்தம்” பிரகடனத்திற்குப் பிறகு, நம் நாட்டில், கிராமிய நீர் விநியோகத்திற்கான பெரும் ஈடுபாடு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் கிராமிய நீரை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு அமைப்பு. இதன் விளைவாக, நாடு முழுவதும் பல திட்டங்களின் மூலம் சுமார் 4,000 சமூக முகாமைத்துவ நீர் வழங்கல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இருப்பினும், சில திட்டங்களில், அதன் பயனுள்ள செயல்பாட்டிலும் அதன் நிலைத்தன்மையிலும் சிரமங்கள் இருப்பதைக் காண முடிந்தது.
கிராமிய நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு (RWS) பிரிவானது தேவையான திறன்கள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களுடன் முழுமையாக பணியாளர்களைக் கொண்டுள்ளது. பிரிவு நிறுவப்பட்டதில் இருந்து பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
.
1980 களின் நடுப்பகுதியில் இருந்து, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கிராமிய நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு (RWS) பிரிவுடன் தொடர்பினை பேணியதுடன், அனைத்து பிராந்திய ஆதரவு மையங்களிலும் கிராமிய நீர் வழங்கல் மற்றும் சதுப்புரவேற்பாட்டு பிரிவுகளை (RWS அலகுகள்) நிறுவியுள்ளது.
தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் (DNCWS) சமூக – முகாமைத்துவ நீர் வழங்கல் திட்டங்களை முகாமைத்துவம் செய்வதற்காக 2014 இல் நிறுவப்பட்டது. ST & RWS பிரிவினால் சமூக முகாமைத்துவ நீர் வழங்கல் செயற்திட்டத்தை செயற்படுத்துவதற்காக பயிற்சியளித்தல் மற்றும் உரிய வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் CBO நிர்வகிக்கும் நீர் வழங்கல் திட்டங்களுக்கு DNCWS ஊடாக கிராமிய குழாய் நீர் வழங்கல் பிரிவுக்கு தொழில்நுட்ப ரீதியாக ஆதரவளித்துள்ளது.
இதற்கிடையில், RWS ஆனது ‘சிறிய நகரங்கள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் மற்றும் அரை நகர்ப்புற அல்லது சிறிய நகர நீர் வழங்கல் திட்டங்களை செயற்படுத்துவதற்கான மையமாக செயற்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக, (ST, RWS) பிரிவின் மூலம் சிறு நகரங்கள், கிராமங்களில் நிதியுதவியுடனான குடிநீர் விநியோகத் திட்டங்களை தயாரிப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பிரதான திட்டத்தை (NWSDB – Master Plan) மற்றும் ஏனைய அமைச்சுக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் (INGOs) நிதியுதவியுடன் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்காக பங்களிப்புக்களை வழங்கி செயற்படுத்தப்பட்டுள்ளது. பின்வரும்,
- NEPWASH (வடக்கு மற்றும் கிழக்கு நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பட்டுத் திட்டம்)- மன்னார், திருகோணமலை
- மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உலர் வலயப் பகுதிகளில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப காலநிலை தாங்கும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத் திட்டம் (CRIWMP)
- கல்வித் துறையுடன் இணைந்து பாடசாலைகளுக்கான குடிநீர் வழங்கும் திட்டம்
- நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பட்டு மேம்பாட்டுத் திட்டத்துடன் (WaSSIP) ஒருங்கிணைந்து தேசிய சமூக நீர் வழங்கல் துறை (DNCWS) மற்றும் தேசிய நீர் வழங்கல் சபை (NWSDB) ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கிராமப்புறங்களில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர் விநியோகத்திற்கு உதவுதல்.
தற்போது, இந்த புதிய பாத்திரத்தில், தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சிறிய நகரங்கள், கிராமிய நீர் பிரிவு (ST, RWS) குறைந்த பணியாளர்களுடன் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ள பங்களிக்கும்.
- குழாய் வழியை நீடிக்கும் திட்டத்தை, காலநிலைக்கு பொருந்தக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவ திட்டம் (CRIWMP) மற்றும் ST, RWS பிரிவினால் சமூக அடிப்படையிலான அணுகுமுறையுடன் கூட்டாக செயல்படுத்தப்படுகிறது.
- நாடளாவியரீதியில் நீர் வழங்கல் உள்ளடக்க வரைபடங்களை தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்துதல்.
- இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வட மாகாணத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குதல்.
- கல்வி அமைச்சினால் வழங்கப்படும் உலக வங்கி நிதியின் கீழ் அரசாங்க பாடசாலைகளுக்கு குடிநீர் விநியோக வசதிகளை வழங்கும் RSC உடன் ஒருங்கிணைத்தல்.
- புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கோரிக்கையின் அடிப்படையில் விகாரைகளுக்கான குடிநீர் விநியோக வசதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப விசாரணை, வடிவமைப்புகள் தயாரித்தல், மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- பாடசாலைகள், வழிபாட்டுத்தளங்கள், அரச நிறுவனங்களுக்கான நீர் முகாமைத்துவ திட்டம்
சிறிய நகரம் மற்றும் கிராமிய நீர், துப்புரவேற்பாட்டு பிரிவானது (ST, RWS) தற்போதுள்ள கிராமிய நீர் வழங்கல் வலைமைப்புக்களின் நிலைபேற்றினை உறுதி செய்வதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தற்போது நடை முறையிலுள்ள நிறுவன அமைப்பைப் பயன்படுத்துகின்றது.
