
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் சேற்றினை மட்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் கெளரவ சனத் நிசாந்த மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கெளரவ பிரசன்ன ரணவீர ஆகியோருக்கிடையில் 15 ஜூன் 2023 அன்று கைத்தொழில் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் திரு. நிஷாந்த ரணதுங்க, உப தலைவர் திரு. டபிள்யூ.ஜி.கே.பி. ரணதுங்க, பொது முகாமையாளர் கலாநிதி வசந்தா இலங்கசிங்க மற்றும் தேசிய வடிவமைப்பு மையத்தின் பணிப்பாளர் திருமதி பி.கே. நிஷாம் அசங்கிகா ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.


