1939 Hotline

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அமைச்சரும் பிரதி அமைச்சரும் தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

  1. Home
  2. /
  3. செய்தி
  4. /
  5. வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்...

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அமைச்சரும் பிரதி அமைச்சரும் தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

ஜனாதிபதியினால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக​​ வைத்தியர் திரு. எச். எம். சுசில் ரணசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டதுடன், பிரதி அமைச்சராக திரு. டி. பி. சரத் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
மேற்கண்ட அமைச்சர்கள் இருவரும் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் 2025.10.15 ஆம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் குமுது லால் போகஹவத்த அவர்கள் மற்றும் அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களினதும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.