1939 Hotline
  1. Home
  2. /
  3. அறிவித்தல்

அறிவித்தல்

 

நாடளாவிய ரீதியிலான பாடசாலை போட்டிகள்

 
உலக நீர் தினம் – 2024

ஜக்கிய நாடுகள் அமைப்பினால் 1993ஆம் ஆண்டு உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், ஒவ்வொரு வருடமும் மார்ச் 22ஆம் திகதி உலகெங்கிலும் உலக நீர் தினம் கொண்டாடப்படுகின்றது. உலக சனத்தொகை அதிகரிப்புக்கு ஒத்ததாக மனித தேவைகள் அதிகரிக்குமிடத்து மக்களின் எதிர்கால இருப்பிற்கு நீரானது மிக முக்கியமானதொரு காரணியாக காணப்படுகின்றது.

2025ஆம் ஆண்டாகையில் உலக சனத்தொகையில் 40% மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாத வகையில் நீர் பற்றாக்குறைக்கு முகம்கொடுத்து பாதிப்பிற்குள்ளாவார்கள். இந்த யதார்த்தத்தை சிறப்பாக விளங்கிக்கொண்டுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நோக்கமாக காணப்படுவது, குழாய் நீரின் பெறுமதி, நீரின் பாதுகாப்பு மற்றும் நீர் நெருக்கடியை தவிர்த்துக்கொள்ளல் ஆகிய விடயங்கள் சம்பந்தமாக பாடசாலை மாணவர்களை அறிவூட்டல் மற்றும் அதற்கான சிறந்ததொரு சுற்றுச்சூழலை கட்டியெழுப்புவதாகும்.

இம்முறை உலக நீர் தினக் கொண்டாட்டம் குறித்து ஜக்கிய நாடுகள் அமைப்பின் அவதானத்திற்கு பின்வரும் விடயம் உட்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க 2024 உலக நீர் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் நீர் சமாதானத்தின் அடிப்படை எனச் சுட்டிக்காட்டப்படும் உலகளாவிய வர்த்தகத்தின் நிமித்தம் அவர்களினால் நீர்ப் பாவனை மற்றும் முகாமைத்துவம் செய்யும் முறையை மாற்றியமைப்பதற்கு தன்னாலான முதலாவது படி முறையை முன்வைத்து செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்களை ஊக்குவிப்பதாகும்.

 

தலைப்பு – “சமாதானத்துக்காக நீர்”

• கட்டுரைப் போட்டி
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தனது ஆக்கங்களை சமர்ப்பிக்க முடிவதுடன், 350 சொற்களுக்கு மேற்படாத வகையில் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் பங்குபற்ற முடியும்.

• சித்திரப் போட்டி
17” x 23” அளவுள்ள தாளினை பயன்படுத்த வேண்டும். எந்தவொரு வர்ண ஊடகத்தையும் பயன்படுத்த முடியும். கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் பங்குபற்ற முடியும்.

• போட்டி நிபந்தனைகள்
தரம் 1 முதல் 8 வரை கனிஷ்ட பிரிவு எனவும் தரம் 9 மற்றும் அதற்கு மேல் சிரேஷ்ட பிரிவு எனவும் கருதப்படும் நிபுணத்துவம் பெற்ற நடுவர் குழாமின் ஊடாகவே வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும்.

• பரிசுகள் (கட்டுரை மற்றும் சித்திரப் போட்டி)
முதலாம் இடம் – ரூபா 10,000 மற்றும் சான்றிதழ்
இரண்டாம் இடம் – ரூபா 7,500 மற்றும் சான்றிதழ்
மூன்றாம் இடம் – ரூபா 5,000 மற்றும் சான்றிதழ்

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

விண்ணப்படிவம் தரவிறக்கம் ⬇️

• ஆக்கங்களை அனுப்புதல்
2024 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் கீழ் காணப்படும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

கூட்டு தொடர்பாடல் பிரிவு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
த.பெ.இல. 14, காலி வீதி, இரத்மலானை
மேலதிக விசாரணைகளுக்கு: 011-2635254