1939 Hotline
  1. Home
  2. /
  3. உள்ளக விவகாரப் பிரிவு ...

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை (PS/ACD/01/2019) ஆகியவற்றிற்கு அமைவாக, ஜனாதிபதி செயலகமும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவும் இணைந்து ஆரம்பித்துள்ள "அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக விவகாரப் பிரிவுகளைத் தாபிப்பதற்கான புதிய திட்டத்திற்கு" அமைவாக, தற்போது எமது சபையிலும் உள்ளக விவகாரப் பிரிவு ஒன்று தாபிக்கப்பட்டுள்ளது

பிரிவுத் தலைவர் :

ஒருமைப்பாட்டு அதிகாரி :
திரு. ஆர். டபிள்யூ. எம். ஆர். பி. வனிகசேகர
பிரதிப் பொது முகாமையாளர் (பாவனையாளர் மற்றும் சொத்து முகாமைத்துவம்)
திருமதி. கௌசலா கருணாரத்ன
முகாமையாளர் (கூட்டு தொடர்பாடல்)
உள்ளக விவகாரப் பிரிவின் பிரதான நோக்கங்கள்
  1. நிறுவனத்திற்குள் ஊழலைத் தடுத்தல் மற்றும் நேர்மையான பண்பாட்டை வளர்த்தெடுத்தல்.

    1. நிறுவனத்தின் அனைத்துச் செயற்பாடுகளினதும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், அத்துடன் நிறுவனச் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்தல்.
    2. நிறுவனத்திற்குள் ஒழுக்கநெறிசார் நிருவாகத்தை ஊக்குவித்தல்.
    3. தவறான நடத்தைகளை அறிக்கை செய்வதை ஊக்குவித்தல், தகவல்களை வெளிப்படுத்துபவர்களைப் பாதுகாத்தல் மற்றும் இரகசியத்தன்மையைப் பேணுவதற்காகப் பாதுகாப்பான மற்றும் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வழிமுறையொன்றை தயாரித்தல்.
    4. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
உள்ளக விவகாரப் பிரிவின் பொறுப்புக்களும் செயற்பாடுகளும்
  1. நிறுவனத்திற்குள் காணப்படும் கட்டமைப்பு ரீதியான இடையூறுகளை இணங்காண்பதற்காக தற்போதைய செயற்பாட்டு முறைகள் மற்றும் சுற்றறிக்கைகளைப் பரிசோதித்தல் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக அவற்றைச் இலகுபடுத்தல்.
  2. ஊழல் அபாய மதிப்பீட்டை (Corruption Risk Assessment) மேற்கொள்வதன் ஊடாக நிறுவனத்திற்குள் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தைகளுக்கு உட்படுத்தப்படக்கூடிய துறைகளை இனங்காண்பதுடன், இலக்கு வைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தல்.
  3. நிறுவனத்தின் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட்ட குறிப்பான ஊழல் எதிர்ப்பு நோக்கங்கள் மற்றும்  உபாயவித்திகளைக் கொண்ட நிறுவன நேர்மைக்கான செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்தல்.
  4. தேசிய ஊழல் எதிர்ப்புச் செயற்பாட்டுத் திட்டத்துடன் நிறுவனக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் ஒன்றிணைப்பதன் ஊடாக தேசிய ஊழல் எதிர்ப்பு உபாயவிதிகளுக்கு இணங்குதல்.
  5. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்புச் சட்டங்களுடன் நிறுவனத்தின் இணக்கப்பாட்டை மதிப்பிடுவதற்காக இணக்கப்பாட்டு மதிப்பீடுகளை (Compliance Assessment) மேற்கொள்வதுடன், மேம்படுத் தப்பட வேண்டிய துறைகளை இனங்காணல்.
  6. அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்காக சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனப்படுத்தல் தேவைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தல், அத்துடன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ​ ஆணைக்குழுவின் கட்டளைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கமைய நலன்களுக்கு இடையிலான முரண்பாடுகளை முகாமைத்துவம் செய்தல்.
  7. நிறுவனத்திற்குள் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகளைப் பொறுப்பேற்பது மற்றும் முகாமைத்துவம் செய்வதற்கும் பாதுகாப்பான பொறிமுறையொன்றை நிறுவுதல், அத்துடன் அத்தகைய அனைத்து முறப்பாடுகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அல்லது பிரிவுகளால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்து விசாரணைகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தொடர்ச்சியான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குதல், அவசியத்திற்கேற்ப ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட விடயங்கள், கண்டுபிடிப்புகள் அல்லது தகவல்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தல்.
  8. நிறுவனம் வழங்கும் சேவைகளை விவரிக்கும் குடிமக்கள் சாசனத்தைத் தயாரித்து வெளியிடுதல்.
  9. அரச அதிகாரிகளால் பின்பற்றப்பட வேண்டிய நியமமான நடத்தை விதிகள் உட்பட, ஒழுக்கநெறிசார் நிருவாகத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை நிறுவுதல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
  10. ஊழல் எதிர்ப்பு தத்துவங்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளை எடுத்தல்.
  11. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் தேசிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் நேர்மை மதிப்பீட்டுச் செயற்பாடுகளுக்காக நிறுவனம் பங்குபற்றுவதையும் அவற்றுடன் ஒன்றிணைவதையும் உறுதிசெய்து, தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மை மதிப்பீட்டிற்கான (National Anti-Corruption Integrity Assessment) நிறுவன மைய நிலையமாகச் செயற்படுதல்.
  12. பிரிவின் கடமைகளை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ச்சியான வழிகாட்டல்களையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவுடன் தொடர்புகளைப் பேணுதல்.
  13.  உள்ளக விவகாரப் பிரிவின் செயற்பாடுகள், ஊழல் எதிர்ப்பு முன்னெடுப்புக்களின் பிரகதி, எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்கால   
  14.  நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளைச் சுருக்கி காலத்திற்கேற்ற மற்றும் வருடாந்த அறிக்கைகளைத் தயாரித்தல்.
  15. தனியார் துறைப் பங்குதாரர்களின் பங்களிப்புடன் நேர்மைத்தன்மையை மேம்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்து  நடைமுறைப்படுத்தல்.

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம்

முறைப்பாடொன்றைச் சமர்ப்பிப்பது எப்படி?

அதற்கமைய, எமது சபையில் இடம்பெறும் ஏதேனும் ஒழுங்கீனம், ஊழல் அல்லது மோசடி தொடர்பில் நீங்கள் அறிந்திருப்பின், அது பற்றிய தகவல்கள்/முறைப்பாடுகளை, எமது சபை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள உள்ளக விவகாரப் பிரிவிற்குப் பெயர் குறிப்பிட்டு அல்லது பெயர் குறிப்பிடாமல் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக அறிவிக்க முடியும்.

எழுத்து மூல புகார் பெட்டி

சபையின் North Wing கட்டிடத்தின் தரைத்தளத்திலும் மற்றும் South Wing கட்டிடத்தின்.

தொலைபேசி இலக்கம்

0112-625778

மின்னஞ்சல்

iau.nwsdb@waterboard.lk

QR කේතය

கருப்பொருள் பாடல்

   

உள்ளக விவகாரப் பிரிவின் அமைப்பு

தொடர் இல.பெயர்உறுப்புரிமைபதவிபிரிவு
1திரு. ஆர். டபிள்யூ. எம். ஆர். பி. வனிகசேகரபிரிவுத் தலைவர் உள்ளக விவகாரப் பிரிவுபிரதிப் பொது முகாமையாளர் (பானையாளர் மற்றும் சொத்து முகாமைத்துவம்)மேலதிகப் பொது முகாமையாளர் (பானையாளர் மற்றும் சொத்து முகாமைத்துவம்)
2திருமதி. கௌசலா கருணாரத்னஒருமைப்பாட்டு அதிகாரிமுகாமையாளர் (கூட்டு தொடர்பாடல்) முகாமையாளர் (கூட்டு தொடர்பாடல்)
உறுப்பினர் குழு
1திரு. டி.ஏ. பிரகாஷ்உறுப்பினர்பிரதிப் பொது முகாமையாளர் (கூட்டிணைந்த திட்டமிடல்)பிரதிப் பொது முகாமையாளர் (கூட்டிணைந்த திட்டமிடல்)
2திரு. எச்.டி.வி. பெர்னாண்டோ உறுப்பினர்பிரதிப் பொது முகாமையாளர் (இயந்திரவியல் மற்றும் மின்னியல்)பிரதிப் பொது முகாமையாளர் (இயந்திரவியல் மற்றும் மின்னியல்)
3திரு. எச்.வி.டி. விக்கிரமரத்னஉறுப்பினர்பிரதிப் பொது முகாமையாளர் (தொழில் உறவுகள்) மேலதிகப் பொது முகாமையாளர் (மனித வள முகாமைத்துவம்)
4திரு. ஏ.பி.எம்.பி. அபேகோன்உறுப்பினர்பிரதிப் பொது முகாமையாளர் (விநியோகம் மற்றும் பொருள் முகாமைத்துவம்) பிரதிப் பொது முகாமையாளர் (விநியோகம் மற்றும் பொருள் முகாமைத்துவம்)
5திருமதி எச்.ஆர்.எஸ். நிரோஷினிஉறுப்பினர்உதவிப் பொது முகாமையாளர் (சுற்றாடல் மற்றும் சமூகம்) பிரதிப் பொது முகாமையாளர் (சுற்றாடல் மற்றும் சமூகம்)
6திருமதி டி.கே.என்.கே. குமாரி உறுப்பினர்உதவிப் பொது முகாமையாளர் (மனித வள அபிவிருத்தி மற்றும் பயிற்சி)உதவிப் பொது முகாமையாளர் (மனித வள அபிவிருத்தி மற்றும் பயிற்சி)
7திரு. ஆர்.ஏ. தஹநாயக்கஉறுப்பினர்உதவிப் பொது முகாமையாளர் (சட்டம்) உதவிப் பொது முகாமையாளர் (சட்டம்)
8திருமதி சமுத்ரா அபேசிங்கஉறுப்பினர்உதவிப் பொது முகாமையாளர் (அறவிடல்)பிரதிப் பொது முகாமையாளர் (வணிகம்)
9திரு. எம்.சி. அபேவிக்ரமஉறுப்பினர்முகாமையாளர் (தகவல் தொழில்நுட்பம்) பிரதிப் பொது முகாமையாளர் (தகவல் தொழில்நுட்பம்)
10திரு. என்.எம்.ஏ.எல்.பி. நவரத்னஉறுப்பினர்பிரதான பொறியியலாளர் (நீர் வழங்கல் திட்டம்) மேலதிகப் பொது முகாமையாளர் (நீர் வழங்கல் திட்டம்)
11திரு. எஸ். சரண்கன்உறுப்பினர்பிரதான பொறியியலாளர் (சொத்து முகாமைத்துவம்) மேலதிகப் பொது முகாமையாளர் (சொத்து முகாமைத்துவம்)
12திருமதி ஆர்.ஏ.எல்.ஆர். ரூபசிங்கஉறுப்பினர்பிரதான கணக்காளர் (கிரயம்) பிரதிப் பொது முகாமையாளர் (கிரயம்)
13திரு. பி.எம். ஜெயரத்னஉறுப்பினர்பொறியியலாளர் (கொள்கை மற்றும் திட்டமிடல்) மேலதிகப் பொது முகாமையாளர் (கொள்கை மற்றும் திட்டமிடல்)
14திரு. பி.ஏ.எம்.எஸ். பெரேராஉறுப்பினர்மனித வள அதிகாரிமேலதிகப் பொது முகாமையாளர் (மனித வள முகாமைத்துவம்)
15திரு. சிசிர ஜயவீர உறுப்பினர்உள்ளக கணக்காய்வாளர்பிரதிப் பொது முகாமையாளர் (உள்ளக கணக்காய்வு)
உதவி அலுவலர் குழு
1திருமதி எச்.டி.ஆர்.பி. ஜெயசிங்க உதவி உறுப்பினர் குழுசமூகவியலாளர்பிரதிப் பொது முகாமையாளர் (சுற்றாடல் மற்றும் சமூகம்)
2திருமதி ஆர்.சி. நாமலி உதவி உறுப்பினர் குழுபொறியியலாளர் (பானையாளர் மற்றும் சொத்து முகாமைத்துவம்)மேலதிகப் பொது முகாமையாளர் (பானையாளர் மற்றும் சொத்து முகாமைத்துவம்)
3திரு. கே.எம்.எஸ்.கே. முஹந்திரம்உதவி உறுப்பினர் குழுதிட்டப் பொறுப்பாளர் (வரைபடங்கள்)பிரதான பொறியியலாளர் (வரைபடங்கள்)
4எச். ஹிரங்கா பிரபாஷணி பெரேராஉதவி உறுப்பினர் குழுமுகாமைத்துவ உதவியாளர்மேலதிகப் பொது முகாமையாளர் (பானையாளர் மற்றும் சொத்து முகாமைத்துவம்)

நிகழ்ச்சிகள்

குறிப்பு – பிரதான நோக்கம் தவறிழைக்கும் ஊழியர்கள்/அதிகாரிகளைத் தண்டிப்பது அல்ல, நிறுவனத்திற்குள் இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளற்ற சுத்தமான, நேர்மையான பண்பாட்டை உருவாக்குவதாகும். எனவே, நேர்மையான அரசாங்க சேவைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

2026 ஜூலை மாதம் 30 ஆம் திகதி, மு.ப. 9.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை – தலைமை அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில்